வெங்காய வியாபாரியிடம் ரூ.5¾ லட்சம் மோசடி செய்யப்பட்டது

வெங்காய வியாபாரியிடம் ரூ.5¾ லட்சம் மோசடி செய்யப்பட்டது
கோவை
வெங்காய வியாபாரியிடம் ரூ.5¾ லட்சம் மோசடி செய்யப்பட்டது.
வெங்காய வியாபாரி
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பனக்குப்பத்தை சேர்ந்தவர் சிவக்குமார். வெங்காயம் மொத்த வியாபாரி. இவர் குனியமுத் தூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் கூறப்பட்டு உள்ளதாவது
நான் வெங்காய மொத்த வியாபாரம் செய்து வருகிறேன். இந்த நிலையில், கடந்த 1.6.2021-ம் அன்று கோவைப்புதூர் ராஜேஸ்வரி நகரை சேர்ந்த வியாபாரி ஜெலாபுதீன் என்பவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
அவர் 12 டன் சின்ன வெங்காயத்தை அனுப்பி வைத்தால் அதற்குரிய தொகையை வங்கி கணக்கில் செலுத்தி விடுவதாக கூறினார்.
ரூ.5¾ லட்சம் மோசடி
அதை நம்பி நான் ரூ.7.20 லட்சம் மதிப்பிலான 12 டன் சின்ன வெங்காயத்தை லாரியில் ஜெலாபுதீனுக்கு அனுப்பி வைத்தேன்.
பின்னர் அவர் 5 கட்டமாக எனது வங்கி கணக்கில் ரூ.1½ லட்சம் அனுப்பி வைத்தார். மீதி பணத்தை கேட்டபோது சிறிது காலம் அவகாசம் கேட்டார்.
ஆனால் அவர் நீண்ட நாட்களாகியும் பணம் கொடுக்கவில்லை.
மீண்டும் தொடர்பு கொண்டால் உரிய பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து என்னிடம் மோசடி செய்த ரூ.5¾ லட்சத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அதன் பேரில் ஜெலாபுதீன் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






