8-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்


8-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
x
தினத்தந்தி 12 April 2022 7:30 PM IST (Updated: 12 April 2022 7:30 PM IST)
t-max-icont-min-icon

8-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்


கோவை

8-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

மாணவி பலாத்காரம்

கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன்ரோடு, ஆர்.ஆர்.லே- அவுட்டை சேர்ந்தவர் பொன்னுசாமி என்ற அப்பு (வயது20). ஆட்டோ டிரைவர். இவருக்கு, 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.  

இதையடுத்து அவர், அந்த மாணவியை தனது அறைக்கு   அழைத்து சென்று ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

 இதைத்தொடர்ந்து அந்த மாணவியை, பொன்னுசாமி தனது அறையில் பல நாட்கள் தங்க வைத்து உள்ளார். 

இந்தநிலையில் மாணவியை காணவில்லை என்று அவருடைய பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடினர். இதற்கிடையே மாணவி வீடு திரும்பினார்.

ஆட்டோ டிரைவர் கைது

அதன்பிறகு கடந்த சில நாட்களாக மாணவியின் உடலில் மாற்றம் ஏற்பட்டது. உடனே பெற்றோர் மாணவியை மருத்துவ மனைக்கு அழைத்துச்சென்றனர்.

 அங்கு பரிசோதனை செய்ததில் மாணவி கர்ப்பமாக இருப்பது உறுதியானது.


அதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். 

இது பற்றி மாணவியிடம் விசாரித்த போது, பொன்னுசாமி பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. 

இது குறித்த புகாரின் பேரில் கோவை கிழக்குப்பகுதி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவ்லத் நிஷா போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் பொன்னு சாமியை கைது செய்தார். 

1 More update

Next Story