தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
குப்பைகளால் துர்நாற்றம்
சின்னவேடம்பட்டி பகுதியில் அத்திப்பாளையம் ரோட்டில் மயானம் உள்ளது. இந்த மயானத்தின் முன்பு உள்ள சாலையின் இருபுறமும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இரவு நேரங்களில் தனியார் வணிக நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலை கழிவுகளில் மர்ம நபர்கள் கொண்டு வந்து கொட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர். மேலும் வீடுகளில் சேகரமாகவும் கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதனால்அந்த பகுதி முழுவதும் தூர்நாற்றம் வீசுகிறது. இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணேசன், சின்னவேடம்பட்டி.
நோயாளிகள் அவதி
பொள்ளாச்சியில் அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமானவர்கள் உள்நோயாளியாகவும், வெளி நோயாளியாகவும் வந்துசிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் நோயாளிகள் வருகை எண்ணிக்கைக்கு ஏற்ப போதியளவு டாக்டர்கள், செவிலியர்கள் பணியில் இல்லை. இதனால் சேவை குறைபாடு ஏற்படுகிறது. மேலும் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதல் டாக்டர்கள், செவிலியர்களை நியமிக்க சுகாதாரத்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனிச்சாமி, பொள்ளாச்சி.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
கணபதி அத்திப்பாளையம் பிரிவில் தரைமட்டப்பாலம் உள்ளது. குடிதண்ணீர் குழாய்கள், டெலிபோன் கேபிள்கள் என பல அரசுத்துறை சம்மந்தப்பட்ட கேபிள்களும் இந்த பாலத்தின் கீழே செல்கின்றன. இந்த நிலையில் பாலத்தினை சரிவர பராமரிப்பு செய்யாததால் பாலத்தின் அடியில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் செல்ல வழியில்லாமல் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் தூர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி, கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது.
ராஜா, அத்திப்பாளையம் பிரிவு.
குப்பைகளை அகற்ற வேண்டும்
கணபதி பகுதியில் உள்ள கட்டபொம்மன் வீதி, கே.ஆர்.ஜி.நகர் பகுதிகளில் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் உள்ளது. மேலும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே முறையாக குப்பை அகற்றவும், கழிவுநீர் தேங்கவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜயகுமார், கே.ஆர்.ஜி.நகர்.
பஸ் நீட்டிக்கப்படுமா?
கோவை காந்திபுரத்தில் இருந்து சூலூர் வழியாக குமாரபாளையத்துக்கு 41 டி அரசு டவுன பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் இங்கிருந்து சோமனூர் செல்ல பஸ்கள் இல்லை. இதனால் 2 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். எனவே இந்த பஸ்சை சோமனூர் வரை நீட்டிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஜித், செங்கத்துறை.
ஆபத்தான குழி
கோவை அருகே உள்ள மத்வராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட இருட்டுப்பள்ளத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த பள்ளி அருகே கழிப்பிடத்தின் கழிவு தேங்கும் குழி இருக்கிறது. அதன் மீது போடப்பட்ட கான்கிரீட் உடைப்பு ஏற்பட்டு இருப்பதால், குழியில் ஓட்டை விழுந்து உள்ளது. இதனால் அங்கு விளையாடும் குழந்தைகள் அதற்குள் தவறி விழ வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆபத்தான இந்த குழியை சரிசெய்ய வேண்டும்.
சண்முகராஜ், இருட்டுப்பள்ளம்.
போக்குவரத்து நெரிசல்
கோவை மணியக்காரன்பாளையத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் அருகே அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலம் புதர் மண்டி கிடக்கிறது. ஆனால் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வாகனங்களில் வருபவர்கள் இடவசதி இல்லாத காரணத்தால் சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்துகிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே வீணாக கிடக்கும் அரசு நிலத்தில் முட்புதர்களை அகற்றி வாகன நிறுத்தம் செய்து கொடுத்தால் உபயோகமாக இருக்கும்.
பழனிசாமி, மணியகாரன்பாளையம்.
சுத்தம் இல்லாத கழிவறை
கோவை மாநகராட்சி 26-வது வார்டு பீளமேடு நேரு நகரில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் அருகே கழிவறை உள்ளது. அது முறையாக சுத்தம் செய்யப்படுவது இல்லை. அத்துடன் அங்கு மின்விளக்குகள் இல்லாததால் இரவில் இந்த கழிவறையை பயன்படுத்த முடிவது இல்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவறையை சுத்தம் செய்வதுடன் மின்விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும்.
ரஞ்சித், பீளமேடு.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டியில் ஏராளமான குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு செல்லும் வழியில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் பிளாஸ்டிக்கை சாப்பிடும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட கூடும். எனவே பேரூராட்சி அதிகாரிகள் குப்பைகளை அகற்ற வேண்டும்.
ராஜா, சூளேஸ்வரன்பட்டி
விபத்து ஏற்பட வாய்ப்பு
பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, உடுமலை, பழனி போன்ற பகுதிகளுக்கும், சுற்று வட்டார கிராமங்களுக்கும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் பஸ்களை பாலக்காடு ரோட்டில் நிறுத்தி, பயணிகளை ஏற்றுகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பஸ் நிலையத்திற்கு போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரஞ்சித், பொள்ளாச்சி.
Related Tags :
Next Story






