கிணத்துக்கடவில் தனியார் பஸ்சில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் படுகாயம்


கிணத்துக்கடவில் தனியார் பஸ்சில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் படுகாயம்
x
தினத்தந்தி 13 April 2022 6:04 PM IST (Updated: 13 April 2022 6:04 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவில் தனியார் பஸ்சில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக டிரைவர், கண்டக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவில் தனியார் பஸ்சில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக டிரைவர், கண்டக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

கல்லூரி மாணவர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள இராவணபுரம் இந்திராநகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி கனகமணி. இவர்களது மகன் நந்தகுமார் (வயது 21). இவர் கிணத்துக்கடவில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு மெக்கானிக்கல் படித்து வருகிறார். 
சம்பவத்தன்று கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற தனியார் பஸ்சில் நந்தகுமார் ஏறினார். கிணத்துக்கடவு அருகே பஸ் வந்து கொண்டிருந்தபோது பஸ்சிலிருந்து நந்தகுமார் தவறி கீழே விழுந்தார்.

படுகாயம்

இதில் நந்தகுமாருக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது பின்னர் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நந்தகுமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் தனியார் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் நந்தகுமாரின் தாய் கலாமணி புகார் கொடுத்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story