கிணத்துக்கடவு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் பலி


கிணத்துக்கடவு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் பலி
x
தினத்தந்தி 13 April 2022 6:04 PM IST (Updated: 13 April 2022 6:04 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள பணப்பட்டி கிழக்கால தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அகிலப்பன் (வயது 72). விவசாயி. இவரது மனைவி உன்னாத்தாள் (58). இவர்களது மகன் போதன்ராஜ். சம்பவத்தன்று சொந்தவேலை காரணமாக உன்னாத்தாள் போதன்ராஜ்வுடன் மோட்டார் சைக்கிளில் கிணத்துக்கடவு சென்றுவிட்டு மீண்டும் பனப்பட்டிக்கு திரும்பினார்கள். மோட்டார் சைக்கிள் 4 வழிச்சாலையில் கல்லாங்காடு புதூர் பகுதியில் வந்தபோது குறுக்கே நடந்து வந்தவர் மீது மோதாமல் இருக்க போதன் ராஜ் பிரேக் போட்டதால் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர்.இதில் உன்னாத்தாளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் கோவை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் உன்னாத்தாள்  பரிதாபமாக உயிரிழந்தார். போதன்ராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story