பொள்ளாச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அழிப்பு

பொள்ளாச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை தரையில் ஊற்றி மதுவிலக்கு போலீசார் அழித்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை தரையில் ஊற்றி மதுவிலக்கு போலீசார் அழித்தனர்.
மதுபாட்டில்கள் பறிமுதல்
தமிழகத்தையையொட்டி கேரள மாநிலம் இருப்பதால், அங்கிருந்து மதுபாட்டில்களை அதிகமாக பொள்ளாச்சிக்கு கடத்தி வருகின்றனர். இதை தவிர டாஸ்மாக் மதுக்கடைகளில் இருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி, சிலர் சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
இதை தடுக்க மதுவிலக்கு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை பாதுகாப்பாக பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் உள்ள மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை அழிக்க கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார். அதன்பேரில் மதுபாட்டில்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மதுபாட்டில்கள் அழிப்பு
இதை தொடர்ந்து பொள்ளாச்சியில் மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ், டாஸ்மாக் மேலாளர் மகாராஜ், கோட்ட கலால் அலுவலர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் மதுபாட்டில்கள் சரிபார்க்கப்பட்டது. பின்னர் குழி தோண்டி மதுபாட்டில்களை அதில் ஊற்றினர். அப்போது போலீசார் உடன் இருந்தனர். பின்னர் போலீசார் மதுபாட்டில்களின் மூடியை கழற்றி குட்டையில் மதுவை ஊற்றி அழித்தனர்.
இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் கூறுகையில், பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் எல்லை பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் 2 ஆயிரத்து 149 மதுபாட்டில்களும், பிப்ரவரியில் 2 ஆயித்து 80 மதுபாட்டில்களும் சேர்த்து மொத்தம் 4 ஆயித்து 229 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பாட்டில்கள் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டது. மூடியுடன் காலி பாட்டில்கள் ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story






