பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் தடுப்புகள் இல்லாத மேம்பாலத்தில் தடுமாறும் வாகனங்கள்

பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் தடுப்புகள் இல்லாத மேம்பாலத்தில் வாகனங்கள் தடுமாறுகிறது. அதனால் இரும்பு தடுப்புகள் அமைக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் தடுப்புகள் இல்லாத மேம்பாலத்தில் வாகனங்கள் தடுமாறுகிறது. அதனால் இரும்பு தடுப்புகள் அமைக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஒருபுறம் மட்டும் தடுப்புகள்
பொள்ளாச்சி கோட்டூர் ரோடு வழியாக வால்பாறை, ஆழியாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மற்றும் பல்வேறு கிராமப்புறங்களுக்கு செல்ல முடியும். இந்த சாலை வழியாக தினமும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருவதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சாலையின் குறுக்கே பொள்ளாச்சி-திண்டுக்கல் ரெயில் பாதை செல்வதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது.
இந்த மேம்பாலம் நேராக செல்லாமல் லேசான வளைவை கொண்டது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் மேம்பாலத்தில் கீழே விழுந்து வாகன ஓட்டி ஒருவர் உயிரிழந்தார். இதற்கிடையில் மேம்பாலத்தில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதிகாரிகள் பாலத்தின் ஒருபுறம் மட்டும் தடுப்புகள் அமைத்து உள்ளனர். மறுபுறம் தடுப்புகள் இல்லை. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
அதிகாரிகள் கவனிப்பார்களா?
போக்குவரத்தை நெருக்கடியை குறைப்பதற்கு கோட்டூர் ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் இந்த பாலத்தில் அதிகமாக விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கரணம் தப்பினால் மரணம் தான் என்ற நிலை உள்ளது. போக்குவரத்து மிகுந்த ரோட்டில் இருவழி பாதையுடன் கூடிய மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் விபத்துகளை தடுக்க பாலத்தின் ஒருபுறமும், மற்றொரு புறமும் பாலத்தில் மைய பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. எனவே அதிகாரிகள் பாலத்தின் இருபுறமும் விபத்துகளை தடுக்கும் வகையில் தடுப்புகளை அமைக்க வேண்டும். மேலும் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அந்த பகுதியில் ஆய்வு செய்து இருவழி பாதை உள்ள பாலத்தை நான்கு வழிச்சாலையுடன் மாற்றி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story






