ஆழியாறில் கோட்டை மாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம்

ஆழியாறில் கோட்டை மாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே ஆழியாறில் கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 29-ந்தேதி இரவு பூச்சாட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து கடந்த 5-ந்தேதி இரவு கம்பம் போடுதல், 7-ந்தேதி காலை ஆதாளியம்மன் கோவில் தீர்த்தம், 9-ந்தேதி தேவி குளம் தீர்த்தம், 10-ந்தேதி திருமூர்த்தி மலை கோவில் தீர்த்தம், 11-ந்தேதி மாசாணியம்மன் கோவில் தீர்த்தம், 12-ந்தேதி காலை ஆழியார் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோவிலுக்கு ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டனர். அதை தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி ஹோமம் வளர்க்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் உற்சவராக வீற்றிருந்த அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அம்மன் திருவீதி உலா, மாலை மஞ்சள் நீராடுதல், அபிஷேக பூஜையும், 17-ந்தேதி மகாமுனி பூஜையும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






