மனைவியை கொன்ற வியாபாரிக்கு ஆயுள் தண்டனை - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு

மனைவியை கொன்ற வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
செங்கல்பட்டு,
சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் காசி விஸ்வநாதன் (வயது 42). இவருக்கு, சாந்தகுமாரி என்ற மனைவி மற்றும் 2 குழந்தைகளும் இருந்தனர். காசி விஸ்வநாதன் மளிகை கடை நடத்தி வந்தார். இவரது கடைக்கு பருப்பு வினியோகம் செய்து வந்த பிரபு என்பவருக்கும் காசி விஸ்வநாதனின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து காசிவிசுவநாதன் தனது மனைவியிடம் கேட்டு கடந்த 13.1.2011 அன்று தகராறு செய்தபோது ஆத்திரத்தில் கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தி கொலை செய்தார்.
இந்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று அந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
காசி விஸ்வநாதனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதமும் விதித்தும் அபராத தொகை செலுத்த தவறினால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டு நீதிபதி அய்யப்பன் தீர்ப்பளித்தார்.
Related Tags :
Next Story






