பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் ரூ 3 கோடியில் அவசர சிகிச்சை பிரிவு திறப்பு

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.3 கோடி மதிப்பில் பொது மற்றும் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவு திறக்கப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.3 கோடி மதிப்பில் பொது மற்றும் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவு திறக்கப்பட்டு உள்ளது.
அவசர சிகிச்சை பிரிவு
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.3 கோடியே 21 லட்சம் செலவில் புதிதாக அதி நவீன கருவிகளுடன் கூடிய பொது தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது. இதை சென்னையில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அவசர சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்தார். பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் நடந்த விழாவிற்கு கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். இதில் நகராட்சி தலைவர் சியாமளா, நவநீதகிருஷ்ணன், பொது சுகாதார பணிகள் இணை இயக்குனர் சந்திரா, தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன், ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கலைசெல்வி, கோட்டூர் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் ராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சமீரன் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள அவசர சிகிச்சை பிரிவுகள் மற்றும் வார்டு பகுதிகளை ஆய்வு செய்தார். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
அதிநவீன உபகரணங்கள்
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1 கோடியே 97 லட்சம் செலவில் 12 படுக்கை வசதிகளுடன் கூடிய குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, 8 படுக்கை வசதிகளுடன் கூடிய பொது அவசர சிகிச்சை பிரிவுக்கு ரூ.1 கோடியே 24 லட்சம் மதிப்பில் மருத்துவ உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பிரிவிற்கு ஆக்சிஜன் வசதி, இ.சி.ஜி., நடமாடும் எக்ஸ்-ரே பிரிவு உள்பட 11 அதி நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் செவிலியர்கள், டாக்டர்கள் அங்குள்ள அறையில் இருந்தவாறு நோயாளிகளின் ஆக்சிஜன் அளவை பார்க்கும் வகையில் நவீன வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பிரிவிற்கு கூடுதலாக டாக்டர், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story






