கிணத்துக்கடவு அருகே தென்னந்தோப்புக்குள் வெள்ளை நிற மயில் உலா


கிணத்துக்கடவு அருகே தென்னந்தோப்புக்குள் வெள்ளை நிற மயில் உலா
x
தினத்தந்தி 14 April 2022 8:51 PM IST (Updated: 14 April 2022 8:51 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு அருகே தென்னந்தோப்புக்குள் வெள்ளை நிற மயில் உலா

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் மயில்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. விவசாய தோட்டப் பகுதிகளில் தானியங்களை சாப்பிடுவதற்காக அதிகளவில் மயில்கள் உலா வருகிறது. பெரும்பாலான மயில்கள் பச்சை, நீலம் போன்ற வண்ணங்கள் கலந்து நீளமான தோகையுடன் தோட்டங்களை சுற்றி வருவது வழக்கம். ஆனால் தற்போது கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராயபுரம் பகுதியில் தென்னந்தோப்புக்குள் வெள்ளை நிற மயில் ஒன்று ஜாலியாக உலா வந்தது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.  மேலும் ஒருசிலர் தங்களுடன் செல்போனில் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இது தற்போது வைரலாகி வருகிறது. கிராமப்பகுதிகளில் இதுபோன்ற வெள்ளை நிறம் கொண்ட மயில்களை இதுவரை பார்த்ததில்லை எனவும், வெள்ளை நிறம் மயில்களை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருப்பதாகவும் கிராம மக்கள் கூறினார்கள். தற்போது முதல் முறையாக தென்னந்தோப்புகளில் வெள்ளை நிறத்தில் மயில் உலாவருவதால் விரைவில் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் வெள்ளைநிற மயில் தென்பட வாய்ப்பு உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
1 More update

Next Story