தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்


தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
x
தினத்தந்தி 14 April 2022 8:52 PM IST (Updated: 14 April 2022 8:52 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

பொள்ளாச்சி

தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

கோவில்களில் சிறப்பு பூஜை

தமிழ்புத்தாண்டையொட்டி நேற்று கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வெங்கடேசா காலனி அய்யப்பன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து நடந்த தீபாராதனை, சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோன்று மாரியம்மன் கோவில், கரிவரதராஜ பெருமாள் கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில், பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதபெருமாள் கோவிலில் பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட 9 வகையான அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் மா, வாழை, மாதுளை உள்ளிட்ட பழ வகைகள் வைத்து பூஜை நடந்தது. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாரம் வழங்கப்பட்டது.

விஷூ பண்டிகை

 கேரளாவில் சித்திரை முதல் நாளை விஷூ பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். விஷூ பண்டிகையொட்டி வீட்டின் பூஜை அறையில் உள்ள கிருஷ்ணர் படத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் அனைத்து வகையான பழங்கள், பூக்கள், தானிய வகைகள் வைத்து பூஜை செய்து வழிப்பட்டனர்.
இதற்கிடையில் ஒரு பெரிய கண்ணாடியும் வைத்து, காலை எழுந்தவுடன், குடும்பத்தில் உள்ள அனைவரும் கனி பார்த்தனர். மேலும் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவருக்கும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கைநீட்டம் பெற்றுக் கொண்டனர். கேரள பராம்பரிய உடை அணிந்து விஷூ பண்டிகையை கொண்டாடினார்கள்.

சூலக்கல் மாரியம்மன்

கிணத்துக்கடவு அருகே சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டையொட்டி அதிகாலை 5 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 7.30 மணிக்கு சூலக்கல் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாரியம்மன் தங்க கவச அலங்காரத்தில் மலர் மாலைகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நீண்ட வரிசையில் நின்று சூலக்கல் மாரியம்மன் பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன் கோவில் கோவில் செயல் அலுவலர் சுந்தரராசு செய்திருந்தார்.  இதேபோல் கிணத்துக்கடவு பஸ் நிலையம் எதிரே உள்ள கரியகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

வால்பாறை

வால்பாறை பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அதன்படி வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில்  அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதையடுத்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் வாழைத்தோட்டம் அன்னை ஸ்ரீகாமாட்சியம்மன் கோவில், அய்யப்பன் கோவில், கருமலை பாலாஜி கோவில் மற்றும் மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. 

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிமலை மந்திரிகிரி வேலாயுத சுவாமி கோவில், ஜே.கிருஷ்ணாபுரம் வஞ்சியம்மன் கோவில், செஞ்சேரிப்புத்தூர் ஸ்ரீகாரணவரதராஜபெருமாள் கோவில், பூராண்டாம்பாளையம் பரசிவம் கோவில், வதம்பச்சேரி சவுடேஷ்வரி அம்மன் கோவில், ஜல்லிபட்டி பெருமாள் கோவில் உள்பட ஒன்றியத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், காலை, மாலை சிறப்பு வழிபாடு விமரிசையாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
1 More update

Next Story