குழந்தையை திருட முயன்றவர் கைது


குழந்தையை திருட முயன்றவர் கைது
x
தினத்தந்தி 14 April 2022 9:56 PM IST (Updated: 14 April 2022 9:56 PM IST)
t-max-icont-min-icon

குழந்தையை திருட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் என்பவரின் மகன் செல்வம் (வயது35). தேவிபட்டி ணத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராமநாதபுரம் மஞ்சன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவரஞ்சனி (22) என்பவருக்கும் திருமணமாகி கடந்த 2 மாதத்திற்குமுன் ஆண்குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்காக சிவரஞ்சனி தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்குமுன் இவர்களின் வீட்டு ஓட்டை பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர் குழந்தையை திருட முயன்றதாக சிவரஞ்சனி கேணிக்கரை போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் மேற்கண்ட சிவரஞ்சனியின் வீட்டிற்குள் புகுந்தவர் அருகில் சில வீடுகள் தள்ளி வசித்து வரும் கருங்கன் மகன் பஞ்சாட் சரம் (29) என்ற எலக்ட்ரீசியன் என்பது தெரியவந்தது. இவரை பிடித்து விசாரித்தபோது செலவுக்கு பணம் இல்லாததால் வீடுபுகுந்து திருட முயன்றதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
1 More update

Related Tags :
Next Story