சித்திரை திருவிழாவையொட்டி கோட்டூரில் ஆதிசங்கரர் திருவீதி உலா

சித்திரை திருவிழாவையொட்டி கோட்டூரில் ஆதிசங்கரர் திருவீதி உலா நடந்தது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியை அடுத்த கோட்டூரில் ஆதி அமரநாயகி உடனமர் ஆதிசங்கரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 3-ந்தேதி சித்தர் பூஜையுடன் தொடங்கியது. கடந்த 13-ந்தேதி பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு ரிஷப வாகனத்தில் ஆதிசங்கரர், ஆதி அமரநாயகியுடன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story






