பொள்ளாச்சியில் நகைக்காக மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை

பொள்ளாச்சியில் நகைக்காக மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்த பிளஸ்-2 மாணவியை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் நகைக்காக மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்த பிளஸ்-2 மாணவியை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நகைகள் திருட்டு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாரியப்பன் பிள்ளை வீதியை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மனைவி நாகலட்சுமி (வயது 76). இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். சதாசிவம் இறந்து விட்டதால் நாகலட்சுமி தனது மகன் செந்திலுடன் வசித்து வந்தார்.
இதற்கிடையில் நேற்று காலை செந்தில் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதையடுத்து ஆசிரியர் காலனியில் உள்ள மகள் சாந்தா தனது தாய் நாகலட்சுமியை பார்க்க வீட்டிற்கு வந்தார். அப்போது நாகலட்சுமி மயங்கிய படி சுவரில் சாய்ந்த நிலையில் கிடந்தார்.
இதையடுத்து சாந்தா தனது தாயை தட்டி எழுப்பி பார்த்தும் அவர் எழுந்திருக்கவில்லை. மேலும் அவரது வாயில் இருந்து ரத்தம் வெளியேறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தா உடனடியாக டாக்டரை வரவழைத்து பரிசோதனை மேற்கொண்டார். இதில் மூதாட்டி இறந்ததும், கழுத்தில் அணிந்திருந்த நகைகள் திருட்டு போனதும் தெரியவந்தது.
மூதாட்டி கொலை
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தமிழ்மணி, சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நாகலட்சுமியின் மகன், மகளிடம் விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து அந்த வழியாக வந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அந்த மாணவி, நாக லட்சுமி பாட்டியிடம் ஒரு வாலிபர் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அவர் யார் என்று எனக்கு தெரியாது என்றார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்ட கேமராவை ஆய்வு செய்தனர்.அதில் பதிவான காட்சியில் வேறு வாலிபர் வந்து செல்லவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து பிளஸ்-2 மாணவியின் மீது போலீசாரின் சந்தேகம் வலுத்தது. இதனால் அந்த மாணவியை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், வீட்டில் தனியாக இருந்த நாக லட்சுமியை நகைக்காக ஆசைப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்ததாக பிளஸ்-2 மாணவி கூறினார்.
பிளஸ்-2 மாணவி கைது
அவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிளஸ்-2 மாணவியை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 20 பவுன் நகை மீட்கப்பட்டது. நகைக்காக மூதாட்டியை பள்ளி மாணவி பட்டப்பகலில் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி மாணவி சிக்கியது குறித்து பரபரப்பு தகவல்கள்
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
மூதாட்டி நாகலட்சுமி கொலை குறித்து முதற்கட்ட விசாரணையில் நாகலட்சுமியின் மூக்குத்தி முதல் அனைத்து நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. வெளி ஆட்களாக இருந்தால் நகையை மட்டும் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று இருப்பார்கள்.
ஆனால் பொறுமையாக மூக்குத்தி, கம்மல் கழற்றி செல்ல வாய்ப்பு இல்லை. இதற்கிடையில் பிளஸ்-2 மாணவி ஒருவரிடம் விசாரணை நடத்திய போது மூதாட்டியிடம் நீல நிறத்தில் சட்டை அணிந்த ஒருவர் பேசிக் கொண்டிருந்ததாக கூறினார்.
அப்போது மாணவியிடம் நீ எங்கே சென்றாய், எத்தனை மணிக்கு அந்த நபர் வந்தார்? என்று போலீசார் கேட்டனர். அதற்கு அந்த மாணவி தையல் கடைக்கு சென்றதாக கூறினார். ஆனால் தையல் கடை திறக்கவில்லை. இதனால் மாணவி மீது சந்தேகம் அடைந்த போலீசார் மேலும் விசாரணை நடத்திய போது மாணவி பதற்றத்துடன் இருந்தார்.
இதற்கிடையில் அந்த மாணவி மூதாட்டி வீட்டிற்கு சென்று விட்டு ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்ததை அப்பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து உள்ளனர். இதனால் மூதாட்டியை அந்த மாணவி கொலை செய்மு இருக்கலாமோ என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.
திருமணத்துக்கு நகை
ஆனால், கொலை செய்ததை அந்த மாணவி விசாரணையின் போது ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து மாணவி காதலிக்கும் வாலிபரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அந்த வாலிபர் தனக்கும், இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.
மாணவியிடம் துருவி, துருவி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பிளஸ்-2 படிப்பு முடிந்ததும் 4 மாதம் கழித்து என் காதலனை திருமணம் செய்வதற்கு முடிவு செய்தேன். ஆனால் வீட்டில் நகை போட்டு திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என்று கருதினேன்.
இதற்கிடையில் பாட்டி நாகலட்சுமி வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு வீட்டிற்குள் சென்றேன். பிறகு பாட்டியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, கழுத்தில் அணிந்திருந்த நகை, மூக்குத்தி, கம்மல் போன்றவற்றை கழற்றி விட்டு வெளியே வந்து விட்டேன். போலீசார் என்னை பிடிக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால், சிக்கி கொண்டதாக தெரிவித்தார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story






