கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 16 April 2022 10:20 PM IST (Updated: 16 April 2022 10:20 PM IST)
t-max-icont-min-icon

தொடர் விடுமுறையையொட்டி, கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

கோவை

தொடர் விடுமுறையையொட்டி, கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

கோவை குற்றாலம்

தமிழ்புத்தாண்டு, ஈஸ்டர் பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலங்களுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் கடந்த 2 நாட்களாக கோவையில் காலையில் வெயில் சுட்டெரித்து வந்தது. மேலும் வளிமண்டல மேலடுக்கு காரணமாக மாலை நேரங்களில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. 

இந்த நிலையில் தொடர்விடுமுறை காரணமாக கோவை மாவட்டம் கோவை குற்றாலம், பரளிக்காடு, காரமடை வனச்சரகம் பூச்சமரத்தூர் ஆகிய பகுதிகளில் செயல்படும் சுற்றுச்சூழல் மையங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். 

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

கோவை நகர் பகுதிகளில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. 

கோவை குற்றால நீர்வீழ்ச்சி பகுதியில் கடந்த சில தினங்களாக லேசான மழையுடன் கூடிய இதமான காலநிலை நிலவி வருகிறது. இதனை அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். 

பூண்டி மலை கோவில், ஈஷா மற்றும் காருண்யாவுக்கு செல்பவர்களில் பலரும் கோவை குற்றாலத்திற்கு வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

முன்பதிவு

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவையில் தொடர் விடுமுறை காரணமாக கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. கோவை குற்றாலத்திற்கு வருபவர்கள் இணையதளம் அல்லது செல்போன் மூலம் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து வரவேண்டும்.

 விடுமுறை நாட்கள் என்பதால் நேரில் சென்று அனுமதி சீட்டு பெற்றதால் சாடிவயல் பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகம் முன்பு சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சுற்றுலா பயணிகள் வந்த வாகனங்கள் அனைத்தும் சாடிவயல் பகுதியில் நிறுத்தப்பட்டு, வனத்துறை சார்பில் அனுமதிக்கப்பட்டிருந்த வாகனங்கள் மூலம் சுற்றுலா பயணிகள் கோவை குற்றால அருவிக்கு அழைத்து செல்லப்பட்டனர். கோவை குற்றால அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டியும் குடும்பத்துடன் குழந்தைகள் பெண்கள் இளைஞர்கள் என உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

சாடிவயல் தடுப்பணையில் குளித்தனர்

பின்பு சாடிவயல் பகுதியில் வனத்துறை அனுமதியுடன் மலைவாழ் மக்கள் வைக்கப்பட்டுள்ள உணவுப் பண்டங்களை உண்டு மகிழ்ந்தனர். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மீண்டும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கோவை குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகலுக்கு மாலை 3.30 மணிக்கு மேல் அனுமதி மறுக்கப்பட்டதால் சாடிவயல் தடுப்பணையில் குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்தனர்.
1 More update

Next Story