அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்


அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 16 April 2022 10:51 PM IST (Updated: 16 April 2022 10:51 PM IST)
t-max-icont-min-icon

முனீஸ்வரன், மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

வால்பாறை

வால்பாறை அருகே ரொட்டிக்கடை பகுதியில் முனீஸ்வரன்,  மாரியம்மன், கருப்பராயன் கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களின் 43-ம் ஆண்டு திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் கோவிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வந்தது.

 பல்வேறு புண்ணிய கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து பூஜை, சக்தி கும்பம் பாலித்தல் போன்ற சிறப்பு வழிபாடுகள் நடந்தன.  விசேஷ பூஜைகள், பொங்கல் வைத்து மாவிளக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முளைப்பாரி பூவோடு எடுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். 

மேலும் பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். ரொட்டிக்கடை விநாயகர் கோவிலில் இருந்து சீர்வரிசைகளை கொண்டு வந்து மாரியம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உச்சிகால பூஜை நடத்தி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7.00 மணிக்கு அம்மன் திருவீதி உலா வானவேடிக்கையுடன் நடைபெற்றது.  அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள, நெய்வேத்தியம் நடைபெறுகிறது. 

தொடர்ந்து ரொட்டிக்கடை பகுதியில் உள்ள குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள, மஞ்சள் நீராட்டு விழா, சக்தி கும்பம் கங்கையில் விடுதல் போன்ற வழிபாடுகள் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், ஊர் பொது மக்கள் செய்து உள்ளனர்.
1 More update

Next Story