கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் 3 நாட்கள் நடக்கிறது


கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் 3 நாட்கள் நடக்கிறது
x
தினத்தந்தி 17 April 2022 1:55 PM IST (Updated: 17 April 2022 1:55 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு, 

செங்கல்பட்டு மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 2015-ம் ஆண்டு விண்ணப்பித்தவர்களுக்கு செங்கல்பட்டு மருத்துவககல்லூரி அரங்கத்தில் வருகிற 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 3 நாட்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நேர்காணல் நடைபெற உள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்துகொள்வதற்கான நேர்முக அழைப்பாணை தனியாக அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது, அதில் குறிப்பிட்டுள்ள நாளில், அழைப்பாணை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றுகள் மற்றும் நகல்களுடன் நேர்காணலில் கலந்துகொள்ள விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் பெயர்பட்டியல் www.chengalpattu.nic.in என்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நேர்முக அழைப்பாணை கிடைக்கப்பெறாத தகுதியான விண்ணப்பதாரர்கள் அழைப்பாணை கடிதத்தினை தேர்வு வளாகத்தில் பெற்று கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

அழைப்பாணை கடிதம் இல்லாதவர்கள் நேர்முகதேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். நேர்காணலில் கலந்துகொள்பவர்களுக்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 More update

Next Story