பாலாறு வடிநில கோட்ட 6 பாசன சங்கங்களுக்கு வாக்குப்பதிவு


பாலாறு வடிநில கோட்ட  6 பாசன சங்கங்களுக்கு வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 17 April 2022 7:43 PM IST (Updated: 17 April 2022 7:43 PM IST)
t-max-icont-min-icon

பாலாறு வடிநில கோட்டத்தில் 6 பாசன சங்கங்களுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

நெகமம்

பாலாறு வடிநில கோட்டத்தில் 6 பாசன சங்கங்களுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவு

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் பாலாறு வடிநில கோட்டத்தில் உள்ள நல்லூர், தொண்டாமுத்தூர், கஞ்சம்பட்டி, நல்லாம்பள்ளி, ஆவலப்பம்பட்டி, வரதனூர், சோழனூர், குள்ளிசெட்டிபாளையம், சோலபாளையம், புளியம்பட்டி, கள்ளிபாளையம், தேவம்பாடிவலசு, ஆர்.பொன்னாபுரம், கப்பளாங்கரை, தேவணாம்பாளையம், காணியாலாம்பாளையம், ஆண்டிபாளையம், செட்டியக்காபாளையம், வடசித்தூர், அணிக்கடவு, கோமங்கலம் ஆகிய 21 கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு தலைவர் மற்றும் 142 ஆட்சி மன்ற தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் பெறப்பட்டு, 8-ந்தேதி வேட்புமனுக்கள் மீது பரீசிலனை செய்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
மேலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தலைவர் பதவிக்கு 5 சங்கங்களுக்கும், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிக்கு 3 சங்கங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி தேவம்பாடி, தொண்டாமுத்தூர் பாசன சங்கங்களில் தலைவர், தலா ஒரு ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிக்கும், புளியம்பட்டி, அணிக்கடவு, கோமங்கலம் ஆகிய சங்கங்களில் தலைவர் பதவிக்கும், செட்டியக்காபாளையம் சங்கத்தில் ஒரு ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 

வாக்குச்சாவடிகள்

பாலாறு வடிநில கோட்டத்தில் 21 பாசன சங்க தலைவர் பதவிக்கும், 124 ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிக்கும் சேர்த்து மொத்தம் 145 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 6 சங்கங்களுக்கு தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதேபோன்று ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிக்கு 120 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். தொண்டாமுத்தூர் பாசன சங்கத்திற்கு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியிலும், தேவம்பாடி பாசன சங்கத்திற்கு டி.காளிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புளியம்பட்டி பாசன சங்கத்திற்கு கிட்டசூராம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அணிக்கடவு பாசன சங்கத்திற்கு ராமச்சந்திராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கோமங்கலம் பாசன சங்கத்திற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, செட்டியக்காபாளையம் பாசன சங்கத்திற்கு சேரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. தேர்தலில் வாக்களிக்க கோவை மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட்ட பாசன சபைக்கான வாக்காளர் பட்டியலின்படி இடம்பெற்று உள்ள வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க தகுதியானவர்கள். அவர்கள் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் அடையாள அட்டையை கொண்டு வந்து வாக்களித்தனர். வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரிக்கு மதியம் 2 மணிக்கு மேல் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் மாலை 4 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
சேரிபாளையத்தில் 98 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் துரைசாமி 68 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். விக்னேஷ் சரவணன் 25 வாக்குகள் மட்டுமே பெற்று இருந்தார். 
1 More update

Next Story