டாப்சிலிப்பில் உடல்நலக்குறைவால் அவதிப்படும் பெண் யானைக்கு தீவிர சிகிச்சை


டாப்சிலிப்பில் உடல்நலக்குறைவால் அவதிப்படும் பெண் யானைக்கு தீவிர சிகிச்சை
x

டாப்சிலிப்பில் உடல்நலக்குறைவால் அவதிப்படும் பெண் யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொள்ளாச்சி

டாப்சிலிப்பில் உடல்நலக்குறைவால் அவதிப்படும் பெண் யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

பெண் யானைக்கு உடல்நலக்குறைவு

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் கோழிகமுத்தியில் யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் 27 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளுக்கு தேவையான உணவுகள் வழங்கப்பட்டு வருவதோடு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், யானைகள் தினமும் நடைபயிற்சிக்கும் அழைத்து செல்லப்படுகிறது. 
இந்த நிலையில் வளர்ப்பு முகாமில் உள்ள விஜயலட்சுமி என்ற பெண் யானைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அந்த யானைக்கு 72 வயது ஆகும். வயது முதிர்வு காரணமாக பெண் யானை கடந்த 7-ந்தேதி முதல் உணவு உட்கொள்ளாமலும், மேய்ச்சல் சரியாக இல்லாமலும் இருந்து உள்ளது. மேலும் சாணம் போடாததால் யானையின் வயிறு உப்பியது.

தீவிர சிகிச்சை

இதன் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு அந்த யானை அவதிப்பட்டது. இதையடுத்து, வனச்சரக அலுவலர் காசிலிங்கம் யானையின் நிலைகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். கோவை கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், உதவி இயக்குனர் கணேசன் ஆகியோர் பெண் யானைக்கு மேல் சிகிச்சை அளிக்க மருத்துவ குழு ஒன்றை நியமித்தனர். 
இந்தக் குழுவில் கோவை வனக் கால்நடை மருத்துவர் சுகுமார், கால்நடை ஓய்வுபெற்ற கூடுதல் இயக்குனர் மனோகரன், நாமக்கல் வன கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் தர்மசீலன், கோவை இணை இயக்குனர் பெருமாள்சாமி ஆகியோர் உள்ளனர். அவர்கள் அந்த பெண் யானைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், யானையை  மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 
1 More update

Next Story