இளம்பெண்ணுடன் பேசியதை தட்டிக்கேட்டதால் தகராறு ஓடும் பஸ்சில் இருந்து கட்டிட தொழிலாளியை கீழே தள்ளிவிட்ட கண்டக்டர்

இளம்பெண்ணுடன் பேசிக்கொண்டு இருந்த கண்டக்டரை தட்டிக் கேட்ட கட்டிட தொழிலாளியை ஓடும் பஸ்சில் இருந்து கீழே தள்ளி விட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை
இளம்பெண்ணுடன் பேசிக்கொண்டு இருந்த கண்டக்டரை தட்டிக் கேட்ட கட்டிட தொழிலாளியை ஓடும் பஸ்சில் இருந்து கீழே தள்ளி விட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கட்டிட தொழிலாளி
மதுரையை சேர்ந்தவர் பெத்துகாளை (வயது 31). இவர் கோவை அருகே உள்ள இடையர்பாளையத்தில் தங்கி இருந்து கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் தனது சொந்த ஊருக்கு செல்ல இடையர்பாளையத்தில் இருந்து காந்திபுரம் பஸ்நிலையத்துக்கு பஸ்சில் வந்தார்.
பின்னர் அங்கிருந்து ஒரு தனியார் பஸ்சில் சிங்காநல்லூர் சென்றார். அப்போது அந்த பஸ்சில் கண்டக்டராக இருந்தவர், ஒரு இளம்பெண்ணிடம் பேசிக்கொண்டே இருந்ததாக தெரிகிறது.
கீழே தள்ளிவிட்டார்
அந்த பஸ் பீளமேடு அருகே வந்தபோது, பெத்துகாளை, அந்த பஸ்சின் கண்டக்டரிடம் சென்று ஏன் அந்த இளம்பெண்ணிடம் அடிக்கடி பேசிக்கொண்டே இருக்கிறீர்கள், உங்கள் வேலையை சரியாக பாருங்கள் என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த பஸ் கண்டக்டர், பெத்துகாளையை தாக்கியதுடன், அவரை தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு ஓடும் பஸ்சில் இருந்து கீழே தள்ளிவிட்டார்.
கண்டக்டர் மீது வழக்கு
இதில் பெத்துகாளைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்ைச அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் பஸ் கண்டக்டரான சூலூரை சேர்ந்த ரஞ்சித்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story






