பாலாறு வடிநில கோட்ட பாசன சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

பாலாறு வடிநில கோட்ட பாசன சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது
பொள்ளாச்சி
பாலாறு வடிநில கோட்ட பாசன சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பாசன சங்க தேர்தல்
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் பாலாறு வடிநில கோட் டத்தில் உள்ள நல்லூர், தொண்டாமுத்தூர், கஞ்சம்பட்டி, நல் லாம்பள்ளி, ஆவலப்பம்பட்டி, வரதனூர், சோழனூர்,
குள்ளிசெட் டிபாளையம், சோலபாளையம், புளியம்பட்டி, கள்ளிபாளையம், தேவம்பாடிவலசு, ஆர்.பொன்னாபுரம், கப்பளாங்கரை, தேவ ணாம்பாளையம், காணியாலாம்பாளையம், ஆண்டிபாளையம், செட்டியக்காபாளையம், வடசித்தூர், அணிக்கடவு, கோமங்கலம் ஆகிய 21 கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் உள்ளன.
இந்த 21 பாசன சங்க தலைவர் பதவிக்கும், 124 ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிக்கும் சேர்த்து மொத்தம் 145 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இதில் 16 சங்கங்களுக்கு தலைவர்களும், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிக்கு 120 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
தேவம்பாடி, தொண்டாமுத்தூர் பாசன சங்கங்களில் தலைவர், தலா ஒரு ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிக்கும்,
புளியம்பட்டி, அணிக்கடவு, கோமங்கலம் ஆகிய சங்கங்களில் தலைவர் பதவிக்கும், செட்டியக்காபாளையம் சங்கத்தில் ஒரு ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிக்கும் நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது.
வெற்றி சான்றிதழ்
இந்த தேர்தல் முடிவுகள் மாலையில் வெளியானது. இதையடுத்து வெற்றி பெற்ற தலைவர்கள், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.
இதற்கிடையில் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்ட தலைவர், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இதில், சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் கலந்து கொண்டு பாசன சங்க தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
விடுப்பட்டவர்க ளுக்கு நாளை (இன்று) பி.ஏ.பி. அலுவலகத்தில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் சான்றிதழ் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






