ஆழியாற்று தண்ணீர் மாசுபடுவது தடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்


ஆழியாற்று தண்ணீர் மாசுபடுவது தடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்
x
தினத்தந்தி 18 April 2022 7:36 PM IST (Updated: 18 April 2022 7:36 PM IST)
t-max-icont-min-icon

ஆழியாற்று தண்ணீர் மாசுபடுவது தடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்


ஆனைமலை

ஆழியாற்று தண்ணீர் மாசுபடுவது தடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

ஆழியாறு 

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஆழியாறு அணை உள்ளது. 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையில் இருந்து பாசனத்துக்காக பள்ளிவிளங்கால், அரியபுரம், பெரிய அணை, காரப்பட்டி, வடக்கலூர் என 5 தடுப்பணைகள் உள்ளன. 

இதன் வழியாக குடிநீருக்காகவும், பாசனத்துக்கும் தண்ணீர் செல்கிறது. மேலும் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக ஆழியாறு அணை விளங்குகிறது.

 இந்த நிலையில் ஆழியாறு அணை அருகே ஆற்றில் 30-க்கும் மேற்பட்ட பன்றிகள் சுற்றித்திரிகின்றன. 

அவை ஆற்று தண்ணீரில் இறங்கி மாசுபடுத்துகின்றன. 

பன்றிகள் நடமாட்டம்

இதனால் ஆழியாற்று தண்ணீர் மாசுபடுகிறது. இதன் மூலம் நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் பன்றிகள் சுற்றித்திரிவதால் ஆழியாற்று தண்ணீர் நிறம் மாறி சாக்கடை  நீர் போல் காட்சி அளிக்கிறது. 

இதனால் சுகாதார சீர்கேடுகளை ஏற்படுவதை தடுக்க பன்றிக ளை ஆழியாறு பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். 

குடிநீரை போதுமான அளவு சுத்திகரித்து வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

குப்பை கொட்டும் அவலம்

இது போல் ஆனைமலை பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படு்ம குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், ஓட்டல் கழிவுகள் போன்றவை வாகனங்களில் கொண்டு வரப்பட்டு ஆழியாற்றங்கரையோர பகுதிகளில் கொட்டப்படுகிறது.

அந்த குப்பைகளுக்கு ஆனைமலை பேரூராட்சி துப்புரவு பணி யாளர்கள் தீ வைத்து எரிக்கின்றனர். 

இதனால் காற்று மற்றும் தண்ணீர் மாசுபடுகிறது. மேலும் குப்பை கழிவுகளில் இருந்து வெளியேறும் புகையால் துர்நாற்றம், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. 

ஆழியாற்றில் இருந்து அம்பராம்பாளை யம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. 

தடுக்க வேண்டும்

எனவே ஆழியாற்றங்கரை பகுதியில் குப்பைகள் கொட்டுவதை யும், அதற்கு தீ வைத்து எரிப்பதையும் தடுக்க வேண்டும். இதற்கு பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அப்போது ஆழியாற்று தண்ணீர் மாசுபடுவது தடுக்கப்படும். மேலும் பேரூராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கு தனியாக இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

1 More update

Next Story