மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம்
மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம்மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம்
கோவை
கோவை மாவட்டம் வால்பாறை முடீஸ் நகரைசேர்ந்த மலையப்பன் என்பவருடைய மகன் ஹரிகரன் (வயது23). கடந்த 16-ந்தேதி மோட்டார் சைக்களில் செல்லும்போது சாலை விபத்தில் படுகாயம் அடைந்து, கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டீன் நிர்மலா ஆலோசனையின்பேரில், அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை பலனளிக்கவில்லை. அவர் மூளைச்சாவு அடைந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. மகனை இழந்த சோகத்திலும், ஹரிகரனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய தாயார் பழனியம்மாள் முன்வந்தார்.
இதைத்தொடர்ந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அவரது 2 சிறுநீரகங்களில் ஒன்று கோவை அரசு மருத்துவமனையில் தொடர் டயாலிசஸ் சிகிச்சையில் உள்ள நோயாளி ஒருவருக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவருக்கும் பொருத்தப்பட்டது. கல்லீரல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
ஹரிகரனின் 2 கண்களும் அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பார்வையிழந்த 2 பேருக்கு பொருத்தப்பட உள்ளது.
ஹரிகரனின் உடலுக்கு கலெக்டர் சமீரன், டீன் நிர்மலா ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது தாயார் பழனியம்மாளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






