கோவை தண்டு மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


கோவை தண்டு மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x

கோவை தண்டு மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


கோவை

கோவை தண்டு மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றம்

கோவை அவினாசி ரோட்டில் தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். 

அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா நேற்று காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜை, தீபாராதனை, அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. 

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மாலையில் பூச்சாட்டு விழா நடைபெற்றது.

27-ந் தேதி சக்தி கரகம்

நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மற்றும் 25-ந்தேதி திருவிளக்கு வழிபாடு நடைபெறுகிறது. 

வருகிற 27-ந் தேதி சக்தி கரகம் கோனியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக பகல் 12 மணிக்கு கோவிலை வந்தடைகிறது.

தினமும் காலை, மாலை 6.30 மணிக்கு யாகசாலை பூஜைகளும், மாலை 4 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகளும் நடைபெற உள்ளது.

அடுத்த மாதம் (மே) 1-ந் தேதி வசந்த உற்சவத்துடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது. 

1 More update

Next Story