கோவை நகரில் இந்த மாதம் இதுவரை 15 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்


கோவை நகரில் இந்த மாதம் இதுவரை 15 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்
x
தினத்தந்தி 19 April 2022 6:44 PM IST (Updated: 19 April 2022 6:44 PM IST)
t-max-icont-min-icon

கோவை நகரில் இந்த மாதம் இதுவரை 15 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்


கோவை

ஏடீஸ் என்ற கொசுவால் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. நல்ல தண்ணீரில் முட்டையிட்டு, லார்வா புழுவாகி, ஏடீஸ் கொசுவாக மாறுகிறது. 

இந்த கொசு பகல் நேரத்தில் கடிக்கும். டெங்கு பாதிப்பு உள்ளவர்களை கடித்து விட்டு மற்றவர்களை  கொசு கடித்தால் எளிதில் டெங்கு காய்ச்சல் பரவும்.

 கோவையில் தற்போது ஏடீஸ் வகை கொசு பெருகி, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

இது குறித்து கோவை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது

கோவை நகரில் இந்த மாதம் இதுவரை 15 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பலர் குணமடைந்து உள்ளனர். 

ஆனால் இதுவரை உயிரிழப்புகள் இல்லை.

தற்போது கோடை மழை பெய்கிறது. எனவே வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்க விடக் கூடாது. தேங்காய் சிரட்டை, டயர்களில் தண்ணீர் தேங்காமல் வீட்டு உரிமையாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். 


தண்ணீர் தொட்டிகளை மூடி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.டெங்கு பரவலை கட்டுப்படுத்த கொசு புகை மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

எனவே பொதுமக்கள் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story