கோவையில் ஆக்கிரமிப்பில் இருந்த 16½ கோடி நிலம் மீட்கப்பட்டது


கோவையில் ஆக்கிரமிப்பில் இருந்த 16½ கோடி நிலம் மீட்கப்பட்டது
x
தினத்தந்தி 19 April 2022 9:36 PM IST (Updated: 19 April 2022 9:36 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் ஆக்கிரமிப்பில் இருந்த 16½ கோடி நிலம் மீட்கப்பட்டது


கோவை

கோவையில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.16½ கோடி நிலம் மீட்கப்பட்டது.

மாநகராட்சி நிலம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 63-வது வார்டு சென்ட்ரல் ஸ்டுடியோ அருகே உள்ள திருநகரில், மாநராட்சிக்கு சொந்தமான 41 சென்ட் பொதுஒதுக்கீடு இடம் இருந்தது. 

அந்த இடத்தை, அருகில் இருந்த திருமண மண்டப உரிமையாளர் ஒருவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்து, அங்கு திருமண மண்டபத்தின் உணவு பரிமாறும் கூடம் அமைத்து பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாநகராட்சிக்கு சொந்தமான இந்த இடத்தை மீட்க வேண்டும் என சமூக ஆர்வலர் தியாகராஜன் கடந்த 2016-ம் ஆண்டு மாநகராட்சியில் புகார் தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து, கிழக்கு மண்டல நகரமைப்பு அலுவலர்கள், அந்த இடத்தை அளவீடு செய்து, திருமண மண்டப உரிமையாளருக்கு நோட்டீஸ் அளித்தனர்.

ரூ.8 கோடி

இதற்கிடையே, திருமண மண்டபத்தின் உரிமையாளர் கோவை மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் மனு அளித்தார். அதில், ஆக்கிரமிப்பு இடத்துக்கு பதிலாக மாற்று இடத்தில் 41 சென்ட் வழங்குவதாகத் தெரிவித்தார். 

அதை ஏற்க மறுத்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து, இடத்தை ஆக்கிரமித்துள்ளது உறுதி செய்யப்பட்டும், அந்த இடத்தை மீட்க மாநகராட்சி அதிகாரிகள் தயக்கம் காட்டி வந்தனர்.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்தின் உரிமையாளர், ஆக்கிரமித்துள்ள 41 சென்ட் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தியுள்ளார். 

இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.8 கோடி ஆகும். அந்த இடத்தில் கிழக்கு மண்டல நகரமைப்பு அலுவலர் தலைமையில் "இது மாநகராட்சிக்கு சொந்தமான இடம்" என அறிவிப்பு பலகை வைத்து, இடத்தை சுற்றி கம்பிவேலி அமைக்கப்பட உள்ளது" என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆக்கிரமிப்பு

இதேபோல் மதுக்கரை அருகே உள்ள சீரபாளையத்தில் 42 சென்ட் அரசு நிலம் தனியார் செவிலியர் கல்லூரி வசம் இருந்தது தெரியவந்தது. பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் இந்த இடத்தை காலி செய்யவில்லை. 

இதையடுத்து ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் தலைமையில் ஊராட்சி தலைவர், கவுன்சிலர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பில் இருந்த 42 சென்ட் நிலத்தை மீட்டனர். 

இந்த இடத்தில் மகளிர் சுயஉதவிக்குழு பங்களிப்போடு துரித உணவுகள் தயாரிக்கும் திட்டத்தை மேற்கொள்ள திட்ட இயக்குனர் உத்தரவிட்டார்.

 மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.8.40 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவையில் 2 இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ரூ.16½ கோடி நிலம் மீட்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story