கிணத்துக்கடவு அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் சிலையின் கழுத்தில் கிடந்த தங்க நகை திருட்டு

கிணத்துக்கடவு அருகே கோதவாடியில் கோவில் பூட்டை உடைத்து அம்மன் சிலையின் கழுத்தில் கிடந்த தங்க நகை மற்றும் பொருட்களை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே கோதவாடியில் கோவில் பூட்டை உடைத்து அம்மன் சிலையின் கழுத்தில் கிடந்த தங்க நகை மற்றும் பொருட்களை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மாரியம்மன் கோவில்
கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடியில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக கோதவாடியை சேர்ந்த மாரிமுத்து உள்ளார். வழக்கம் போல் கோவில் பூசாரி பூஜைகளை முடித்துவிட்டு கோவிலைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார். கோவிலைத் திறந்து பூஜைகள் செய்ய பூசாரி கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கோவிலைத் திறந்து பார்த்தார்.
அப்போது கோவிலில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அம்மன் சிலையின் கழுத்தில் கிடந்த 4 கிராம் தங்கத் தாலி செயின் மற்றும் கோவில் பொருட்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
போலீஸ் துணை சூப்பிரண்டு விசாரணை
இதனால் அவர், பொன்மலை வேலாயுதசாமி கோவில் செயல் அலுவலர் சரவணன் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு தகவல் கொடுத்தார். மேலும், கிணத்துக்கடவு போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து பேரூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு திருமால், கிணத்துக்கடவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் திருட்டு நடந்த கோவிலுக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டு கைரேகை, தடையங்களும் சேகரிக்கப்பட்டது.
மர்ம ஆசாமிகளை வலைவீச்சு
இந்த கோவிலில் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையர்கள் பாத்திரங்களை திருடி சென்றனர். தற்போது 2-வது முறையாக மீண்டும் மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்று அம்மனின் கழுத்தில் கிடந்த தாலியை திருடியதோடு, பித்தனை பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்று உள்ளனர். இதுகுறித்து போலீசர்ா வழக்குப்பதிவு செய்து கோவிலின் பூட்டை உடைத்து நகை மற்றும் பொருட்களை திருடிச்ெசன்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறர்ாகள்.
கோவிலில் அம்மனின் கழுத்தில் கிடந்த தாலி திருடிப்பட்ட சம்பவம் கோதவாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story






