வால்பாைறக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு நீரார் அணையில் படகு சவாரி தொடங்கப்படுமா?


வால்பாைறக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு நீரார் அணையில் படகு சவாரி தொடங்கப்படுமா?
x
தினத்தந்தி 19 April 2022 10:05 PM IST (Updated: 19 April 2022 10:05 PM IST)
t-max-icont-min-icon

வால்பாைறக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதால் நீரார் அணையில் படகு சவாரி தொடங்கப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து உள்ளார்கள்.

வால்பாறை

வால்பாைறக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதால் நீரார் அணையில் படகு சவாரி தொடங்கப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து உள்ளார்கள். 

படகு இல்லம்

வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் வாழைத்தோட்டம் புதிய பஸ் நிலையம் பகுதியில் நகராட்சியின் அண்ணா நூற்றாண்டு நினைவு பூங்கா இருந்தது. இந்த பூங்காவை அகற்றி விட்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டது.
படகு இல்லம் அமைக்கப்பட்டு ஒரு ஆண்டு முடிந்துவிட்டது. படகு இல்லத்திற்கான படகுகள் வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டது. சோதனை அடிப்படையில் படகு சவாரியும் நடத்தப்பட்டது. படகு இல்லத்திலும் அனைத்து பணிகளும் முழுமையாக முடிவடைந்து விட்ட நிலையில் படகில் சவாரி செய்யும் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் மட்டும் வாங்க வேண்டியிருந்தது.

துர்நாற்றம் வீசுகிறது

இந்த நிலையில் நகராட்சி அலுவலகத்தில் ஏற்பட்ட அலுவலக பிரச்சினை காரணமாக படகு இல்லம் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்காக திறக்கப்படாமல் விடப்பட்டது. தற்போது படகு இல்லம் வால்பாறை பகுதியின் குப்பை கிடங்காக மாறிவிட்டது. 
படகு இல்லத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் முழுவதும் துர்நாற்றம் வீசும் நிலையில் கிடக்கிறது. தற்போது சமவெளிப் பகுதியில் கோடையின் தாக்கம் அதிகரித்து வெயில் வாட்டி வருகிறது. அதேசமயம் வால்பாறை பகுதியில் கடந்த ஒருமாதமாக கோடைமழை தொடங்கி சிலசமயம் இடியுடன் கூடிய கனமழையாகவும் பல சமயங்களில் லேசான மழையும் விட்டு விட்டு பெய்து வருவதால் வால்பாறை பகுதி முழுவதும் பசுமைக்கு திரும்பி இதமான காலசூழ்நிலைக்கு மாறிவிட்டது. 

படகு சவாரி தொடங்கப்படுமா?

இதனால் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே வால்பாறைக்கு வரத்தொடங்கியுள்ள சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் நகராட்சி படகு இல்லத்திற்காக வாங்கி வைக்கப்பட்டுள்ள படகுகளை கொண்டு நீரார் அணையில் படகு சவாரியை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வால்பாறை பகுதி பொது மக்களும் சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். வருகின்ற மே மாதம் முழுவதும் நீரார் அணையில் படகு சவாரியை மேற்கொண்டால் பொதுப்பணித்துறைக்கு வருமானம் கிடைப்பதோடு சுற்றுலா பயணிகளும் மகிழ்ந்து செல்வார்கள். அதிகளவிலான சுற்றுலா பயணிகளும் வந்து செல்வார்கள்/ வால்பாறை பகுதியில் அனைத்து வகையான தொழில்களும் முன்னேற்றம் அடையும். மேலும் சாலையோர கடை வைத்திருப்பவர்களின் வாழ்வாதாரம் மேம்படும். எனவே படகு சவாரியை தொடங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 
1 More update

Next Story