கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.252 கோடியில் மேலும் 3 மேம்பாலம் கட்டும் பணி ஜூலை மாதம் தொடங்குகிறது

கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.252 கோடியில் மேலும் 3 மேம்பாலம் கட்டும் பணி ஜூலை மாதம் தொடங்குகிறது
கோவை
கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.252 கோடியில் மேலும் 3 மேம்பாலம் கட்டும் பணி ஜூலை மாதம் தொடங்குகிறது.
போக்குவரத்து நெரிசல்
கோவை நகரில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிக ரித்து வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டு வருகிறது.
அதை தவிர்க்க கோவை அவினாசி ரோடு, திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு ஆகிய பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கோவையில் மேலும் 3 இடங்களில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட உள்ளது.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது
3 இடங்களில் மேம்பாலம்
கோவை காளப்பட்டி ரோடு சந்திப்பில் இருந்து துடியலூர் ரோடு சந்திப்பு வரை 1.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.60 கோடியே 40 லட்சம் மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது.
சிங்காநல்லூர் உழவர் சந்தை முதல் ஜெயசாந்தி தியேட்டர் வரை 2.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.140 கோடியே 80 லட்சம் மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது.
சாய்பாபா காலனி சந்திப்பில் ரூ.50 கோடியே 93 லட்சம் மதிப்பில் 1.14 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட உள்ளது.
3 மேம்பாலங்களும் மொத்தம் ரூ.252 கோடி மதிப்பில் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட உள்ளது.
ஜூலை மாதம் தொடங்குகிறது
இந்த 3 பாலங்களுக்கும் நிலம் கையகப்படுத்த வேண்டிய தேவை இருக்காது. எனவே மேம்பாலங்கள் கட்டும் பணி ஜூலை மாதத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிதாக 3 மேம்பாலங்கள் கட்டப்பட்டால் திருச்சி ரோடு, காளப்பட்டி ரோடு, சாய்பாபா காலனி சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
இந்த நிலையில் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு உள்ள கவுண் டம்பாளையம் மேம்பாலம், திருச்சி ரோடு மேம்பாலம் ஆகியவற்றை வாகன போக்குவரத்துக்கு விரைவில் திறந்து விட வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






