விலைவீழ்ச்சி அடைந்து உள்ளதால் சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலை உள்ளது. எனவே பட்டறை அமைத்து சின்னவெங்காயத்தை இருப்பு வைத்து உள்ளனர்

விலைவீழ்ச்சி அடைந்து உள்ளதால் சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலை உள்ளது. எனவே பட்டறை அமைத்து சின்னவெங்காயத்தை இருப்பு வைத்து உள்ளனர்
கோவை
விலைவீழ்ச்சி அடைந்து உள்ளதால் சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலை உள்ளது. எனவே பட்டறை அமைத்து சின்னவெங்காயத்தை இருப்பு வைத்து உள்ளனர்.
சின்ன வெங்காயம்
கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. இதே போல் பொள்ளாச்சி உள்பட பல்வேறு பகுதிகளிலும் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது மார்க்கெட்டு களில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட சின்ன வெங்காயத்தை விவசாயிகளிடம் இருந்து கிலோ ரூ.10-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
விலை திடீ ரென்று வீழ்ச்சி அடைந்து உள்ளதால் சின்னவெங்காயம் அறு வடை செய்த விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
விவசாயிகளுக்கு நஷ்டம்
இது குறித்து தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த சின்ன வெங்காய விவசாயி பெரியசாமி கூறியதாவது
சின்ன வெங்காயம் ஒரு ஏக்கர் சாகுபடி செய்வதற்கு ரூ.70 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால் கொள்முதல் விலை மிகவும் குறைவாக உள்ளது.
இதனால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. இதை தவிர்க்க பட்டறை அமைத்து சின்னவெங்காயத் தை இருப்பு வைத்து விற்க நடவடிக்கை மேற்கொண்டு வருகி றோம்.
பட்டறையில் 100 நாட்களுக்கு சின்னவெங்காயத்தை இருப்பு வைக்க முடியும். அதற்குள் ஓரளவு விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
குளிர்பதன கிடங்கு வசதி
இது போன்ற நிலை ஏற்படுவதை தவிர்க்க தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை இருப்பு வைத்து விற்க வசதியாக குளிர்ப்பதன கிடங்கு அரசு சார்பில் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
விலை வீழ்ச்சி ஏற்படும் காலங்களில் சின்னவெங்காயத்தை ஏற்றுமதி செய்ய ஏதுவாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக வேளாண் துறை மூலம் மார்க்கெட்டிங் செய்து விவசாயிகளுக்கு பாதிக்காத வகையில் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விளை பொருட்களுக்கு விலை கிடைக்காத போது விவசாயிகள் கடனில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.
அது போன்ற நிலை ஏற் படாமல் தடுக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக் கை எடுத்து விவசாயிகளின் கண்ணீரை துடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
Related Tags :
Next Story






