லதாங்கி வித்யா மந்திர் பள்ளியில் பெற்றோர்களுக்கு மாணவர்கள் பாதபூஜை

லதாங்கி வித்யா மந்திர் பள்ளியில் பெற்றோர்களுக்கு மாணவர்கள் பாதபூஜை செய்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி ஸ்ரீ லதாங்கி வித்யா மந்திர் பள்ளியில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் ரமேஷ் ராஜ்குமார் தலைமை தாங்கினார். தாளாளர் சாந்திதேவி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் பத்மாசினி வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோர் காலில் விழுந்து ஆசி பெற்று, பின் பாதபூஜை நடத்தினர். இதை தொடர்ந்து அம்மையப்பர் வழிபாடு, அபிஷேகம், வேள்வி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள் உமாதேவி, மாலினி, சந்திராவதி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்துகொண்டனர். முடிவில் பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
Related Tags :
Next Story






