வடசித்தூரில் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் குறித்து விளக்கம்


வடசித்தூரில் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் குறித்து விளக்கம்
x
தினத்தந்தி 21 April 2022 7:07 PM IST (Updated: 21 April 2022 7:07 PM IST)
t-max-icont-min-icon

வடசித்தூரில் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

நெகமம்

கிணத்துக்கடவு ஒன்றியத்தில் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்ட பயனாளிகளுக்கு பயிற்சி முகாம் வடசித்தூரில் நடந்தது. முகாமில் கால்நடை மருத்துவர் ரவிச்சந்திரன், உதவி மருத்துவர்கள் பிரகாஷ், பரமேஸ்வரன், ரவிசந்திரன், கார்த்திகேயன், கால்நடை ஆய்வாளர் கவுசிநிஷா, இந்துமதி ஆகியோர் கலந்து கொண்டு விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் குறித்து விளக்கம் அளித்தனர். மேலும், ஆடுகள் வளர்க்கும் முறை, நோய் தடுப்பு முறை, குடற்புழு நீக்க முறைகள், ஆட்டுப்பண்ணை அமைப்பது குறித்து பயிற்சி அளித்தனர்.

1 More update

Next Story