திராட்சை விவசாயம் வளர்ச்சிக்கு திரும்புமா


திராட்சை  விவசாயம் வளர்ச்சிக்கு  திரும்புமா
x
திராட்சை விவசாயம் வளர்ச்சிக்கு திரும்புமா
தினத்தந்தி 21 April 2022 10:25 PM IST (Updated: 21 April 2022 10:25 PM IST)
t-max-icont-min-icon

திராட்சை விவசாயம் வளர்ச்சிக்கு திரும்புமா

கோவை

கோவை அருகே உள்ள பேரூர், காளம்பாளையம், மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், தீத்திபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் தற்போது 500 ஏக்கருக்கு மேல் பன்னீர் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் பருவ நிலை மாற்றத்தால் போதிய விளைச்சல் இல்லாமல் போகும் நிலை உள்ளது. இந்த மகசூல் பாதிப்பு மற்றும் அண்டை மாநிலங்களின் உற்பத்தி அதிகரிப்பு ஆகிய காரணங்களால் நாங்கள் முதலீடு செய்த அளவிற்கு லாபம் கிடைப்பதில்லை. 

இதனால் திராட்சை விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. ஆகவே வீழ்ச்சியான பன்னீர் திராட்சை விவசாயம் வளர்ச்சிக்கு திரும்புமா என்பது கோவை விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. அது பற்றி பார்க்கலாம்:-
இது குறித்து திராட்சை விவசாயி பெரியசாமி கூறியதாவது:-
கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தில் பிற பகுதிகளுக்கு செல்லும்  கோவைபன்னீர் திராட்சை பழங்களின் உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது. 10 டன் உற்பத்தியான நிலையில் தற்போது 5 டன் வரைதான் உற்பத்தி உள்ளது. ஆகவே இந்த உற்பத்தி இழப்பு, சாகுபடி பரப்பு குறைவு, மற்றும் போதிய  விலை இல்லாமை போன்றவற்றால், கோவை பகுதியில் திராட்சை விவசாயத்தில் எதிர்பார்த்த பலன்கள் தற்போது இல்லாமல் உள்ளது.
மற்றொரு விவசாயி நாராயணசாமி கூறியதாவது:-

பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் ஒருபுறம் இருந்தாலும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த திராட்சை பழங்களை சந்தைபடுத்த உரிய வழிகாட்டுதல் இல்லை. விவசாயிகள் லாபம் பெற முடியாமல் போவதற்கு இதுஒரு காரணமாக உள்ளது. விவசாயிகள் இந்த திராட்சை விவசாயத்தை கைவிடாமல் இருப்பதற்கு தோட்டக்கலைதுறை மற்றும் வேளாண்மைத்துறை சார்பில் உற்பத்தியை பெருக்குவதற்கு உரிய ஆய்வு செய்வது மட்டுமல்லாமல், சந்தை படுத்துவதற்கும் வழிகாட்டுதல் மற்றும் காலத்திற்கு ஏற்றவாறு உரிய பயிற்சிகளையும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.


1 More update

Next Story