பணமோசடி வழக்கில் நிதி நிறுவன மேலாளர் கைது


பணமோசடி வழக்கில் நிதி நிறுவன மேலாளர் கைது
x
தினத்தந்தி 22 April 2022 4:55 PM IST (Updated: 22 April 2022 4:55 PM IST)
t-max-icont-min-icon

பணமோசடி வழக்கில் நிதி நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் இந்திராநகரை சேர்ந்தவர் வினோத் (வயது 32). இவர் மதுராந்தகத்தில் உள்ள நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த போது மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கியுள்ளார்.

இதில் சரியாக வாங்கிய கடனை திருப்பி செலுத்திய பெண்களை குறி வைத்து அவர்களின் வங்கி கணக்கு எண் மற்றும் ரகசிய குறியீடு எண் போன்றவற்றை வைத்து 86 பெண்கள் பெயரில் ரூ.28 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

கடன் வாங்கியவர்களில் ஒருவர் கூட 2-வது தவணையாக பெற்ற கடனை திருப்பி செலுத்தாததால் சந்தேகமடைந்த நிதி நிறுவன நிர்வாகம் இது குறித்து மேலாளரிடம் கேட்டபோது சரியான பதில் வராததால் அவர் மீது செங்கல்பட்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் நிதி நிறுவன மேலாளர் வினோத்தை கைது செய்து விசாரணை நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தார்.
1 More update

Next Story