கிணத்துக்கடவில் மேம்பாலத்தின் கீழ் மின்விளக்குகள் எரியாத தால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் விபத்து அபாயம் இருப்பதால பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்


கிணத்துக்கடவில் மேம்பாலத்தின் கீழ் மின்விளக்குகள் எரியாத தால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் விபத்து அபாயம் இருப்பதால பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்
x
தினத்தந்தி 22 April 2022 8:22 PM IST (Updated: 22 April 2022 8:22 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவில் மேம்பாலத்தின் கீழ் மின்விளக்குகள் எரியாத தால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் விபத்து அபாயம் இருப்பதால பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்


கிணத்துக்கடவு

கிணத்துக்கடவில் மேம்பாலத்தின் கீழ் மின்விளக்குகள் எரியாத தால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் விபத்து அபாயம் இருப்பதால பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

கிணத்துக்கடவில் மேம்பாலம்

கோவை -பொள்ளாச்சி மெயின் ரோட்டில் கிணத்துக்கடவு உள்ளது. அதை சுற்றி நிறைய கிராமங்கள் உள்ளன. அங்கு செல்லும் பொதுமக்கள் கிணத்துக்கடவில் இறங்கி தான் தங்களின் கிராமங்களுக்கு சென்று வருகின்றனர். இதனால் கிணத்துக்கடவு ரோட்டில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் இருந்து கிணத்துக்கடவு வழியாக செல்லும் சாலை நான்கு வழிச் சாலையாக மாற்றப்பட்டது. இதையொட்டி கிணத்துக்கடவு ஊருக்குள் மேம்பாலம் கட்டப்பட்டது. 

மின்விளக்குகள் எரிவதில்லை

அந்த மேம்பாலத்தை தாங்கும் வகையில் 60 -க்கும் மேற்பட்ட தூண்கள் உள்ளன. அதில் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிக ளின் வசதிக்காக 300-க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் பொருத் தப்பட்டன. 

அதில், கோவை -பொள்ளாச்சி இடையே கோவில் பாளையம், தாமரைக்குளம், கல்லாங்காட்டுபுதூர், கிணத்துக்கடவு மேம்பாலம் மற்றும் மேம்பாலத்தின் கீழ் பகுதிகளில் விளக்குகள் பொருத்தப்பட்டன. 

அவை, மாலை 6.30மணிக்கு தொடங்கி காலை 6 மணி வரை ஒளிரும். ஆனால் தற்போது 4 வழிச்சாலையில் பெரும்பாலான இடங்களில் மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. 

மேலும் கிணத்துக்கடவில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஏராளமான எல்இடி பல்பு பொருத்தப்பட்டு உள்ளது. அதில் சில இடங்களில் மட்டும் மின் விளக்கு ஒளிர்கிறது. 

பல இடங்களில் மின் விளக்குகள் சரிவர எரியாமல் உள்ளது.

விபத்து அபாயம்

இதனால் அந்த ரோடே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

 மேலும் பஸ்களில் வந்து கிணத்துக்கடவில் இருந்து அருகில் உள்ள ஊர்களுக்கு நடந்து செல்லும் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

மேம்பாலத்தின் கீழ் மின்விளக்குகள் எரியாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதோடு திருட்டு, வழிப்பறி போன்ற அச்சத்துடன் மக்கள் நடமாட வேண்டி உள்ளது.

நடவடிக்கை வேண்டும்

இது தொடர்பாக அந்த பகுதிமக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் மேம்பாலத்தின் கீழ் மின் விளக்குகள் எரிய உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.

 எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மின்விளக்குகள் எரிய செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இது தொடர் பாக  தமிழக முதல்- அமைச்சருக்கும், மாவட்ட கலெக்டருக்கும் புகார் மனு அனுப்ப உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

1 More update

Next Story