கிட்டசூராம்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கலாம் என்று குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்


கிட்டசூராம்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கலாம் என்று குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்
x
தினத்தந்தி 22 April 2022 8:24 PM IST (Updated: 22 April 2022 8:24 PM IST)
t-max-icont-min-icon

கிட்டசூராம்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கலாம் என்று குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்


பொள்ளாச்சி

கிட்டசூராம்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கலாம் என்று குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுக்குமாடி குடியிருப்புகள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கிட்டசூராம்பாளை யத்தில் 4 ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. அங்கு நகர்ப்புற வாழ் விட மேம்பாட்டு வாரியம் (குடிசை மாற்று வாரியம்) சார்பில் ரூ.41 கோடியே 50 லட்சம் செலவில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி கடந்த ஒராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

அதில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய கோரி சப்-கலெக்டர் அலுவல கம், தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர். 

இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கலாம் என்று பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும்  மக்கள் அதிகமாக வரும் அரசு அலுவலகங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. 

அதில் விண்ணப்பிக்க தேவை யான தகுதிகள், மற்றும் ஆவணங்கள் குறித்த தகவல்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இது குறித்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது

ஆவணங்கள் இணைப்பு

கிட்டசூராம்பாளையத்தில் பஞ்சமி நிலத்தில் 512 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதில் வீடுகள் ஒதுக்கீடு பெற பயனாளி ஆதிதிராவிட (எஸ்.சி.) வகுப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

 பொள்ளாச்சி நகராட்சி மற்றும் அதை சுற்றி உள்ள பேரூராட்சி பகுதிகளில் வசிக்கவும், குடும்ப மாத வருமானம் ரூ.25 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். 

பயனாளிக்கு சொந்தமாக வீடோ, இடமோ இருக்க கூடாது. பயனாளி திருமணம் ஆனவராக இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் போது குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு நகல்கள், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல், புகைப்படம்-2, ஆதிதிராவிட வகுப்பு சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர். நகர் திட்டப்பகுதி மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு வாரிய கோவை கோட்ட அலுவலகத்தில் விண்ணப்பங் களை வருகிற 15-ந் தேதிக்குள் கொடுக்க வேண்டும். 

இதற்கு ஒரு வீட்டின் மதிப்பு ரூ.9 லட்சமாகும். 

இதற்கு மத்திய அரசு ரூ.6 லட்சமும், மாநில அரசு ரூ.1½ லட்சமும் கொடுக்கிறது. மீதி ரூ.1½ லட்சம் பயனாளிகளின் பங்களிப்பு ஆகும். 

இந்த நிலையில் பங்களிப்பு தொகை அதிகமாக இருந்ததால் வாரியத்தின் உயர் அதிகாரிகளிடம் பரிசீலனை செய்ய அறிவுறுத்தப்பட்டது. 

அதன்பேரில் பயனாளிகளின் பங்களிப்பு தொகையை குறைத்து ரூ.60 ஆயிரத்து 600 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

600 பேர் விண்ணப்பம்

தற்போது வரை 600 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப் பட்டு உள்ளது. தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்படு வார்கள். 

மேலும் தேர்வு செய்யப்படும் பயனாளிகளில் முன்கூட்டி பங்களிப்பு தொகை செலுத்தும் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

1 More update

Next Story