பிஏபிவாய்க்காலில் முறைகேடாக தண்ணீர் எடுப்பதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் 27 விவசாயிகளின் மின் இணைப்பை துண்டிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்


பிஏபிவாய்க்காலில் முறைகேடாக தண்ணீர் எடுப்பதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் 27 விவசாயிகளின் மின் இணைப்பை துண்டிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்
x
தினத்தந்தி 22 April 2022 8:27 PM IST (Updated: 22 April 2022 8:27 PM IST)
t-max-icont-min-icon

பிஏபிவாய்க்காலில் முறைகேடாக தண்ணீர் எடுப்பதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் 27 விவசாயிகளின் மின் இணைப்பை துண்டிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்


சுல்தான்பேட்டை

பி.ஏ.பி.வாய்க்காலில் முறைகேடாக தண்ணீர் எடுப்பதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் 27 விவசாயிகளின் மின் இணைப்பை துண்டிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பி.ஏ.பி. திட்டம்

பரம்பிக்குளம் ஆழியார் பாசனத் திட்டத்தில் (பி.ஏ.பி.) கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 3.77 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.

 விவசாயிகள் நலன் கருதி 4 மண்டலங்களாக பிரித்து திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 15 ஆயிரத்து 600 ஏக்கர் விளை நிலம் பி.ஏ.பி. திட்டத்தில் பாசன வசதி பெற்று வருகின்றன. 

அதில் கிடைக்கும் தண்ணீர் தென்னை மற்றும் காய்கறி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு பாய்ச்சப்படுகிறது. 

அதிகாரிகள் ஆய்வு

இந்த நிலையில், சுல்தான்பேட்டை ஒன்றிய பகுதிகளில் பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுக்க கோவை மாவட்ட பி.ஏ.பி. கூட்டு கண்காணிப்பு குழுவை சேர்ந்த சூலூர் தாசில்தார் சகுந்தலா மணி, 

சுல்தான்பேட்டை மின் வாரிய செயற் பொறி யாளர் பாலமுரளி, சுல்தான்பேட்டை பொதுப் பணித் துறை உதவிசெயற்பொறியாளர் ஆதிசிவன் மற்றும் போலீசார் உள்பட  அதிகாரிகள் குழுவினர் சுல்தான்பேட்டை வந்தனர்.

அவர்கள், மலைப்பாளையம், பூராண்டாம் பாளையம், குமார பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பி.ஏ.பி. பிரதான கால்வாயில் தண்ணீர் திருடப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர்.

27 விவசாயிகள்

இதில் மலைப்பாளையத்தில் தண்டபாணி, சிவக்குமார், கனக ராஜ், காந்திராஜ், லீலா கிருஷ்ணன், சத்யபிரியா, பூராண்டாம் பாளையத்தில் கதிரவன், சிதம்பரம், கந்தசாமி, கந்தவடிவேல் ராஜ், பழனிசாமி, சுப்பிரமணி, குமாரபாளையத்தில் சதாசிவம் உள்பட

 மொத்தம் 27 விவசாயிகள் வணிக மின் இணைப்புகள் மற்றும் விவசாய மின் இணைப்புகளை பயன்படுத்தி முறைகே டாக பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீரை எடுத்து விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்தியதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, 27 விவசாயிகளின் மின் இணைப்புகளை துண்டிக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், பி.ஏ.பி. வாய்க்காலில் மோட்டார் வைத்து சட்டவிரோதமாக தண்ணீர் திருடினால் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப் படும். 

மேலும், சட்டப்படியாக வழக்கு பதிவு செய்து பாரபட்ச மின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

1 More update

Next Story