வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு - மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு


வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு - மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 23 April 2022 5:49 PM IST (Updated: 23 April 2022 5:49 PM IST)
t-max-icont-min-icon

சிங்கப்பெருமாள் கோவிலில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

வண்டலூர்,  

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 25). இவர் சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள ஸ்ரீவாரி நகரில் தங்கி தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து சாலையில் நடந்து செல்லும்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story