1,280 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்


1,280 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்
x

பல்கலைக்கழக துணைவேந்தர், 1,280 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்

நெல்லை:
பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரி செயலர் கே.பி.கே.செல்வராஜ் வரவேற்றார். முதல்வர் ஜான்கென்னடி ஆண்டறிக்கை வாசித்தார். நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல பிஷப் ஏ.ஆர்.ஜி.எஸ்.டி.பர்னபாஸ் மாணவ-மாணவிகளுக்கு ஆசி வழங்கி பேசினார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி, 1,280 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார். பட்டம் பெற்றவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் துணை முதல்வர் ஜெயசுந்தரராஜ், காசாளர் ராஜேஷ் ஆனந்த செல்வன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியை ராஜகுமாரி நன்றி கூறினார்.

Next Story