பெட்டி கடையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
பெட்டி கடையில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையை அடுத்த சிந்தலகுப்பம் பகுதியில் ஒரு பெட்டி கடையில் நேற்று முன்தினம் சந்தேகத்தின் பேரில் சிப்காட் போலீசார் சோதனை செய்தனர். அங்கு 1 கிலோ 300 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில், பெட்டிக்கடை உரிமையாளரான நேபாளத்தை சேர்ந்த அபிஷேக் கடக்கா (வயது 23) என்பவர் அப்பகுதியில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சாவை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்டிக்கடையில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்த வாலிபரை கைது செய்தனர். கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story