ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
நண்பர்களுடன் குளிக்க சென்ற பள்ளி மாணவன் ஏரியில் மூழ்கி பலியானான்.
குடியாத்தம்
குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி ஊராட்சி கதிர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் விவசாயி. இவரது மகன் கோகுல் (வயது 14). கல்லப்பாடியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி விடுமுறை என்பதால் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்களுடன் அங்குள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளான். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றபோது நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உள்ளான்.
இதனையடுத்து உடன் சென்ற சிறுவர்கள் ஊரில் உள்ளவர்களிடம் சொல்லி, அவர்கள் விரைந்து வந்து ஏரியில் மூழ்கிய கோகுலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் கோகுல் இறந்து விட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பரதராமி போலீசார் சிறுவன் கோகுலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பரதராமி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குசலகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story