திருடிய வாலிபர் கைது


திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 24 April 2022 9:49 PM IST (Updated: 24 April 2022 9:49 PM IST)
t-max-icont-min-icon

கோவில் உண்டியலை உடைத்து திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கொட்டாம்பட்டி, 
கொட்டாம்பட்டி அருகே உள்ள குமுட்ராம்பட்டி கலிய பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை வெளிப்புற பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி கொண்டிருந்தார். அப்போது கோவில் பராமரிப்பு பணி செய்து வரும் சக்திவேல் கோவிலுக்கு சென்றுள்ளார். கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். திருடிய மர்ம நபர் சக்திவேலை தள்ளி விட்டு தப்பி ஓடினார். இதையடுத்து சக்திவேல் கூச்சலிட்டதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் விரைந்து திருடிய நபரை கையும் களவுமாக பிடித்தனர்.  தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீசார் விரைந்து சென்று மர்ம நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உண்டியல் திருட்டில் ஈடுபட்டது நாகமங் கலத்தை சேர்ந்த வடுகப்பன் மகன் பெரியண்ணன் (வயது33) என்பது விசாரணையில் தெரியவந்தது. அவரை பிடித்து கைது செய்த போலீசார் ரூ.1,880 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
1 More update

Next Story