அனுமதியின்றி விளம்பர பேனர் வைத்த ம.தி.மு.க. நிர்வாகி மீது வழக்கு


அனுமதியின்றி விளம்பர பேனர் வைத்த ம.தி.மு.க. நிர்வாகி மீது வழக்கு
x
தினத்தந்தி 24 April 2022 9:55 PM IST (Updated: 24 April 2022 9:55 PM IST)
t-max-icont-min-icon

அனுமதியின்றி விளம்பர பேனர் வைத்த ம.தி.மு.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்தனர்

மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் ம.தி.மு.க. மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை கழக செயலாளர் துரை வைகோவை வரவேற்று பழைய பஸ் நிலையத்திலிருந்து கூட்டம் நடைபெறும் இடம் வரை சாலையின் ஓரங்களில் ம.தி.மு.க. கொடிகள் மற்றும் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அந்த விளம்பர பேனர்கள் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டதாக மயிலாடுதுறை ம.தி.மு.க. நகர செயலாளரும், நகரசபை கவுன்சிலருமான மார்க்கெட் கணேசன் என்பவர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 


Next Story