கார் மோதி விவசாயி பலி
திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி அருகே கார் மோதி விவசாயி பலியானார்.
திருப்புவனம்,
மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 65). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் சிலருடன் காரில் தாயமங்கலம் சென்று விட்டு நேற்று முன்தினம் மாலை மதுரைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். காரை அவரது மகன் செந்தில்குமார் (38) ஓட்டி வந்துள்ளார். அப்போது திருப்பாச்சேத்தி பஜனைமட தெருவைச் சேர்ந்த விவசாயி கணேசன் (60), இவரது மகன் சப்பானிக்குமார் (39) ஆகிய இருவரும் திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி அருகே ரோட்டோரம் நடந்து சென்றுள்ளனர். அப்போது இவர்களுக்கு பின்னால் வந்த செந்தில்குமாரின் கார், விவசாயி கணேசன் மீது மோதி ரோட்டோரத்தில் கவிழ்ந்தது. இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். காரில் வந்த மாரிமுத்து, டிரைவர் செந்தில்குமார் உள்பட சிலர் காயமடைந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து கணேசனின் மகன் சப்பானிக்குமார் திருப்பாச்சேத்தி போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, கார் டிரைவர் செந்தில்குமார் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story