முன்னாள் ராணுவ வீரரின் மனைவி போலீஸ் நிலையம் முன்பு தர்ணா


முன்னாள் ராணுவ வீரரின் மனைவி போலீஸ் நிலையம் முன்பு தர்ணா
x
தினத்தந்தி 27 April 2022 2:33 AM IST (Updated: 27 April 2022 2:33 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் ராணுவ வீரரின் மனைவி போலீஸ் நிலையம் முன்பு தர்ணா

திருவெறும்பூர்,ஏப்.27-
திருவெறும்பூர் அருகே நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது40). முன்னாள் ராணுவ வீரரான இவருக்கும், திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம் மகள் ஜாஸ்மின் ஷீபா (34) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.  இந்த நிலையில் கணவர் ஸ்டீபனும், மாமியார் ஜாக்குலின் ஸ்டெல்லாராணியும் சேர்ந்து குழந்தை இல்லாத காரணத்தைக் காட்டி கொடுமை படுத்தியதாக  திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஜாஸ்மின் ஷீபா கடந்த ஜனவரி 19-ந்் தேதி புகார் மனு கொடுத்தார். அந்த மனு  திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால்எந்தவிதநடவடிக்கையும்எடுக்கப்படவில்லையாம். இதனால் விரக்தி அடைந்த ஜாஸ்மின்ஷீபா தனது பெரியம்மா சகாய ஆரோக்கிய ராணி, தம்பி ஆல்பர்ட் மார்சல் ஆகியோருடன் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, திருவெறும்பூர் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்  மனோகரன் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story