டேங்கர் லாரி மீது கார் மோதல்; தந்தை, பச்சிளம் குழந்தை பலி
மதுராந்தகம் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் தந்தை மற்றும் பச்சிளம் குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
சென்னை,
மதுரையை சேர்ந்தவர் அஸ்வின் குமார் (வயது 28). இவரது மனைவி சிவ பாக்கியம் (23). இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகளும், 6 மாதத்தில் திவானா என்கிற ஆண் குழந்தையும் இருந்தது. அஸ்வின் குமார் குடும்பத்துடன் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் நேற்று காலை காரில் குடும்பத்துடன் மதுரை நோக்கி புறப்பட்டார்.
இந்த நிலையில் மதுராந்தகம் அடுத்த புக்கதுறை கூட்டு சாலை அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, சாலையோரம் நின்ற டேங்கர் லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த அஸ்வின் குமாரும், அவரது 6 மாத ஆண் குழந்தையும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதுகுறித்து படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story