வீட்டுமனை பட்டா கேட்டு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


வீட்டுமனை பட்டா கேட்டு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 April 2022 8:58 PM IST (Updated: 27 April 2022 8:58 PM IST)
t-max-icont-min-icon

வீட்டுமனை பட்டா கேட்டு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

செங்கல்பட்டு, 

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர், செங்கல்பட்டு ஆகிய வட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில், பழங்குடி இருளர் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படாததால், அரசின் நலத்திட்டங்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், வீட்டுமனை பட்டா உள்பட அடிப்படை வசிகளை செய்து தரக்கோரி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கோரிக்கை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.சி.முருகேசன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், மாவட்ட செயலாளர் எம்.அழகேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.மோகனன், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சண்முகம், துணைச் செயலாளர் எம்.செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு பேசினர். 

முன்னதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் இருந்து ஊர்வலமாக சென்று மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்திடம் கோரிக்கை மனுவை சங்கத்தின் நிர்வாகிகள் வழங்கினர்.

Next Story