தேன்கனிக்கோட்டை அருகே பள்ளி ஆசிரியரை மிரட்டிய வாலிபர் கைது
தேன்கனிக்கோட்டை அருகே பள்ளி ஆசிரியரை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சாப்ரலப்பள்ளியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 19). இவருடைய தம்பி தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று அருணாச்சலம் தம்பிக்கும், மற்றொரு மாணவனுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் வேதியியல் ஆசிரியர் சீனிவாசன் (39) மாணவர்களை கண்டித்துள்ளார். இதை அறிந்த அருணாச்சலம் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று ஆசிரியர் சீனிவாசனை பணி செய்ய விடாமல் தடுத்து, மிரட்டினார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசில் ஆசிரியர் சீனிவாசன் புகார் செய்தார். இந்த புகாரின்பேரில் அருணாச்சலத்தை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story