பஸ் நிலையத்தில் குடுமிப்பிடி சண்டை... கல்லூரி மாணவிகள் 10 பேர் தற்காலிக நீக்கம்


பஸ் நிலையத்தில் குடுமிப்பிடி சண்டை... கல்லூரி மாணவிகள் 10 பேர் தற்காலிக நீக்கம்
x
தினத்தந்தி 28 April 2022 3:32 PM IST (Updated: 28 April 2022 3:32 PM IST)
t-max-icont-min-icon

புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி கோவில் பஸ் நிலையத்தில் குடுமிப்பிடி சண்டை போட்ட கல்லூரி மாணவிகள் 10 பேர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர்.

திருவொற்றியூர், 

சென்னை புதுவண்ணாரப்பேட்டை காமராஜர் சாலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வரும் மாணவிகள், கல்லூரி முடிந்து புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி கோவில் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது திடீரென மாணவிகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. மாணவிகள் இரு பிரிவாக பஸ் நிலையத்தில் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவிகளின் இந்த மோதல் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கல்லூரி முதல்வர் சுடர்கொடி, பஸ் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகளை அடையாளம் கண்டு, அதில் 10 மாணவிகளை 10 நாட்கள் தற்காலிக நீக்கம் செய்து உத்தரவிட்டார். மோதலில் ஈடுபட்ட மேலும் 5 மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story